சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்க விருப்பம்; ஆனால் ஆன்-க்ரிட் அல்லது ஆஃப்-க்ரிட் - எது பொருத்தமானது?

நெட்-மீட்டர் அமைக்கத் தகுதி பெற்ற பலர், "மின்சார வாரியத்திடம் பல மாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்தும், இன்னும் மீட்டர் வழங்கப்படவில்லை; சந்தையில் இருந்து வாங்கிக்கொள்ளவும் அனுமதிப்பதில்லை" என்று கூறுகின்றனர்.

காரணம், யார் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைத்தாலும், வருவாய் இழப்பு மின்சார வாரியத்துக்குத்தான்.

சில வர்த்தக நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும், நெட் மீட்டர் இல்லாமலே ஆன்-க்ரிட் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்துக்கொண்டுள்ளன. ஆனால், நாம் மின்சார க்ரிட்டுக்கு வழங்கியுள்ள மின்சாரத்தைக் கணக்கிட முடியாத ஆன்-க்ரிட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தால் என்ன பயன்?

அத்தகைய நிலையில், தனித்து இயங்கக்கூடிய ஆஃப்-க்ரிட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்துக்கொள்வதே சிறப்பானது (முக்கியமாக, உங்களது தேவை 100 கிலோ வாட் வரை இருக்கும்போது - அதாவது, மின்சாரப் பயன்பாடு மாதத்துக்கு 12,000 - 15,000 யூனிட் எனில்).

ஆன்-க்ரிட் ஆஃப்-க்ரிட்
மின்சார வாரியம்
மின்சார வாரியத்திடம் இருந்து அனுமதி தேவை. தேவையில்லை.
மீட்டரை மாற்றி மின்சார வாரியம் வழங்கும் நெட் மீட்டரைப் பொருத்த வேண்டும். தேவையில்லை.
மின் தடை
இயங்க சூரிய ஒளியும், மின் சப்ளையும் தேவை. இயங்க சூரிய ஒளி மட்டும் தேவை.
உதயம் முதல் அஸ்தமனம் வரை தினமும் மின்சாரம் உற்பத்தியாகும்.
இரவுகளில், பேட்டரிகளில் இருந்து மின்சாரம் பெறலாம்.
பேட்டரி சேமிப்பு
பேட்டரி வைக்க நெட் மீட்டர் திட்டத்தில் அனுமதி இல்லை. தேவையான அளவு வைத்துக் கொள்ளலாம்.
மின்சாரப் பயன்பாட்டை எவ்வளவு சேமிக்கலாம்?
நெட் மீட்டர் திட்டத்தில், வருடப் பயன்பாட்டில் 90% வரை திருப்பித் தரலாம். திருப்பித் தர முடியாது. ஆனால், மின்சார வாரியத்திடம் இருந்து பெறும் மின்சாரத்தை அதே அளவு குறைக்க முடியும்.

விளக்கம் பெற / உங்கள் இடத்தில் கள மதிப்பீடு மேற்கொள்ள, எங்களை அழையுங்கள்.

மானியங்கள் அரிதாகி வரும் நிலையில், சூரிய சக்திக்கு மாறுவதால் என்ன பயன்?

சூரிய சக்திக்கு மாறுவதை அரசாங்கத்தின் நன்மைக்காக செய்வதாக நினைத்தால், அது தவறு.

நாம் நமக்குத்தான் நன்மை செய்து கொள்கிறோம்.

நாம் யூனிட்டுக்கு 6 ரூபாய்க்கும் அதிகமாக மின் கட்டணம் செலுத்துகிறோம் என்றால், சூரிய சக்திக்கு மாறுவது நிச்சயம் பயன் தரக்கூடியது. நமது முதலீட்டை சுமார் 5 வருடங்களில் திரும்பப் பெற்றுவிடலாம். அதன் பின் அடுத்த 20-30 வருடங்களுக்கு இலவச மின்சாரம்தான்.

அது எப்படி வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றுக்கும் கணக்கே இல்லாமல் செலவு செய்ய முடிந்த நம்மால், இதற்கு மட்டும் மானியத்தை எதிர்பார்க்கத் தோன்றுகிறது?

நாம் மானியம் பெற்றா பைக்குகளும், கார்களும், ஸ்மார்ட் ஃபோன்களும், நிலங்களும், வீடுகளும் வாங்குகிறோம்? ஹோட்டல்களில் சாப்பிடுகிறோம்? அல்லது ஷாப்பிங் மால்களில் செலவு செய்கிறோம்?

நாம் மானியம் பெற்றா பெட்ரோல் / டீசல் போடுகிறோம்?

நாம் கரண்ட் பில் கட்டுவதற்கு மானியம் கிடைக்கிறதா?

அல்லது நாம் யூ.பி.எஸ் வாங்கியதற்கு மானியம் கிடைத்ததா?

உங்களுக்குத் தேவையான சூரிய மின்னுற்பத்தி நிலையத்தின் அளவு, தேவைப்படும் முதலீடு, அதைத் திரும்பப் பெறும் காலம், இவை பற்றி அறிய, எங்களை அழையுங்கள்.

சூரிய சக்திக்கு மாறுவது, பணத்தை சேமிக்க மட்டும்தானா?

சூரிய சக்திக்கு மாறுவதன் மூலம் நமது நிறுவனம் வெளியிடும் கார்பன் மாசின் அளவு குறைகிறது.

மேலும் இது நீண்ட காலம் பலன் தரும் புத்திசாலித்தனமான வியாபார முடிவு. ஏனெனில்:

 • குறைந்தது 25 வருடங்களுக்கு, மின்கட்டணத்தில் குறிப்பிடத்தக்க வருடாந்திர சேமிப்பு.
 • கூடுதல் சுய-சார்பு மற்றும் குறையும் மின்-வாரியம் மீதான சார்பு.
 • இயற்கைப் பேரிடர் நேரங்களில்கூட மின்சக்தி இருப்பு குறித்த உறுதி.
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதல் தடுப்புக்கான நேர்மறையான பங்களிப்பு.
 • சமுதாயப் பொறுப்பு, தேசத்தைக் கட்டி எழுப்பும் முயற்சியில் பங்களிப்பு ஆகியவற்றில் ஈடுபாட்டை வளர்க்கும் ஆக்கபூர்வ முயற்சி.

பேட்டரிகள், பழைய காலத்தவையா அல்லது பாதுகாப்பற்றவையா?

நிச்சயம் இல்லை; வருங்காலத்தில் ஸ்மார்ட்-க்ரிட்களில்கூட, உச்சகட்டத் தேவையை பூர்த்தி செய்ய, பெரிய அளவிலான பேட்டரிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.

பேட்டரிகளில் டிஸ்ட்டில்ட் வாட்டர் நிரப்புவதை ஞாபகம் வைத்துக் கொள்வது எப்படி?

நமது வாகனங்களில் பெட்ரோல் / டீசல் நிரப்ப மறக்கிறோமா?

அப்படித்தான். எந்த செயலையும் அதன் தேவை, தீவிரம் உணர்ந்து செய்தால், அது மறக்காது.

எவ்வளவு பேட்டரி போதுமானதாக இருக்கும்?

தேவையான பேட்டரி அளவு

 • பகல் நேர மின்சாதனப் பயன்பாடு (லோடு)
 • பேட்டரியை சார்ஜ் செய்ய இருக்கும் சக்தி = உற்பத்தியான சக்தி - பகல் நேர லோடு
 • பவர்-கட் சமயங்களில் தேவைப்படும் பேக்-அப்பின் அளவும் காலமும்.
ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படும். பேட்டரி அளவு குறைவாக இருந்தால், சூரிய சக்தி வீணாகும். அதிகமானால், பேட்டரி முழுதும் சார்ஜ் ஆகாது.

எது சிறந்தது: லெட்-ஆசிட் பேட்டரியா அல்லது ஜெல் பேட்டரியா?

 • எதுவாக இருந்தாலும், சோலார் பேட்டரியையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சோலார் பேட்டரிகள், அதே அளவு யூ.பி.எஸ் பேட்டரிகளைவிட 2 மடங்கு அதிகம் லோடுக்கு சப்ளை செய்யக் கூடியவை.
 • சரியாகப் பராமரிக்கப்படும் லெட்-ஆசிட் பேட்டரிகள், ஜெல் பேட்டரிகளைவிட அதிக நாட்கள் நீடித்து உழைக்கும்.
 • லெட்-ஆசிட் பேட்டரிகளைப் பொறுத்தவரை, டிஸ்டில்ட் வாட்டரை நிரப்புவது தவிர வேறு பராமரிப்பு இல்லை.
உங்கள் சந்தேகங்களுக்கு விடை அறிய, எங்களை அழையுங்கள்.

ஏன் தொழிற்சாலைகளுக்கு, நெட்-மீட்டரிங் சலுகைகள் வழங்கப்படவில்லை?

தற்போது 500 யூனிட்டுகளுக்கு மேல் மானியம் வழங்கப்படாத நிலையில், வீட்டு உபயோகிப்பளர்கள் 501ஆவது யூனிட்டில் இருந்து, யூனிட்டுக்கு ரூ. 6.60/= மின்-கட்டணம் செலுத்துகிறார்கள்.

அதாவது அடக்க விலை யூனிட்டுக்கு ரூ. 6.60 என்ற நிலையில், அரசாங்கம் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 6.35/- என்ற கட்டணத்தில் (அதாவது யூனிட்டுக்கு ரூ. 0.25 மானியத்துடன்) வழங்குகிறது.

ஓரு வேளை தொழிற்சாலைகள் ஏற்கனவே மானிய விலையில் மின்சாரம் பெறுவதால், அவர்களுக்கு நெட்-மீட்டரிங் சலுகைகள் வழங்கப்படாமல் இருக்கலாம்.

சூரிய சக்திக்கு மாற நம் மக்கள் ஆயிரம் முறை யோசிக்கும் வேளையில், சோலார் பயன்பாட்டை அதிகரிக்க உலகம் என்ன செய்கிறது பாருங்கள்? சோலார் ரோடு ஃப்ரான்ஸின் நார்மன்டி: சோலார் ரோடு உள்ள உலகின் முதல் நாடு
வியக்க வைக்கும் சோலார் ப்ராஜக்ட்டுகள்
60 செல் மற்றும் 72 செல் சோலார் பேனல்கள்: ஒரு விளக்கம்
இதுதான் உங்கள் உலகம்...!!!
எங்கள் உதவிக்கு, அலைபேசி எண் : +91-84899-25659 அல்லது இ-மெயில் முகவரி : contact@resilientsolar.com
Copyright © Resilient Solar Technologies. All rights reserved.